இணைய சேவையின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த அரசு உறுதி – ஃபாஹ்மி

நாட்டில் உள்ள மக்களின் நலனுக்காக இணைய சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதில் அரசாங்கம், அதாவது தமது அமைச்சகத்தின் மூலம் உறுதிபூண்டுள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

இணைய சேவையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, இணைய உள்கட்டமைப்பு பிரச்சினையிலும் கவனம் செலுத்தப்படும் என்றும், இன்று தனது அலுவலகத்தில் பெட்ரோனாஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பெட்ரோனாஸ் டிஜிட்டல் துறையின் மரியாதை நிமித்தமான அழைப்பைபின் பேரில் தான் சந்திப்பை மேற்கொண்டதாக, அவர் முகநூலில் இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.

நாடு முழுவதும் இணைய கவரேஜை விரிவுபடுத்துவதற்கும், இணைய வேக அளவை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதாகவும், தற்போது நாட்டில் மக்கள்தொகை அதிகம் கொண்ட பகுதிகளில் சுமார் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே இணைய அணுகலைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஃபாஹ்மி ஏற்கனவே கூறியிருந்தார்.

பிப்ரவரி 2023 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 4,363 5G தளங்கள் நிறுவி முடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here