மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெர்சாத்து கட்சியின் இரண்டு கணக்குகளை முடக்கியது

பெர்சாத்து கட்சிக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளன.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 200 (AMLATFPUAA 2001) பிரிவு 50 இன் படி, வங்கிகளுக்கு தடை உத்தரவை சமர்ப்பித்த பின்னர், கடந்த ஏப்ரல் 11 அன்று இரண்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

“முன்னதாக, இந்த கணக்குகள் சட்டவிரோதமான வருமானத்தில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணம் பற்றிய விசாரணைகளுக்கு உதவும் வகையில், AMLATFPUAA சட்டம் 2001 இன் பிரிவு 44 இன் படி, 2023 ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் முடக்கப்பட்டன, ” என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here