சட்டவிரோத குடியேறிகளை சபாவை விட்டு வெளியேற அனுமதிக்க லஞ்சம் பெற்றதாக இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

இரண்டு மாதங்களுக்கு முன்பு, வேறு நபர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய 9 சட்டவிரோத குடியேறிகளை சபாவிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு அனுமதிக்க, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக இரண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது இன்று தாவாவ் சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி ஜேசன் ஜுகா முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட ரோஸ்மைனி சபார், 40, மற்றும் எல்மின் சாலே, 30, ஆகிய இருவரும் தாம் குற்றமற்றவர்கள் என்று மறுத்து, விசாரணை கோரினர்.

கடந்த மார்ச் 23 அன்று, தாவாவ் விமான நிலையத்தில் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை குடிநுழைவு கவுண்டர் 1 வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேறிச் செல்லவும், தவாவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் ஏறவும் ஒரு நபரிடம் இருந்து தலா 4,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக ரோஸ்மைனி மீது குற்றம் சாட்டப்பட்டது.

தாவாவ் UTC குடியேற்ற அலுவலகத்தில் பணிபுரிந்த ரோஸ்மெய்னி, மார்ச் 22 அன்று, லாட் 69 & 70, கிரவுண்ட் & முதல் தளம் எண் G4 & G6, குபோடா சதுக்கம், தவாவில் அமைந்துள்ள Muamalat வங்கியின் தாவாவ் கிளையில் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தாவாவ் விமான நிலையத்தின் குடிநுழைவு அலுவலகத்தில் இருக்கும் எல்மின் மீது அதே இடம் மற்றும் தேதியில் லஞ்சம் பெற்ற தொகையை பெற்றுக்கொண்டு, ரோஸ்மைனியின் ஊழல் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரோஸ்மைனி மற்றும் எல்மினுக்கு தலா RM10,000 ஜாமீன் வாழங்கப்பட்டதுடன், மேலும் அவ்விருவரும் தங்கள் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை MACC அலுவலகத்தில் ஆஜராகி அறிக்கை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டத்து.

வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்காக ஜூலை 27 அன்று நிர்ணயிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here