விபத்தில் சிக்கி ஒருவர் பலி; இரு வாகன ஓட்டுநர்கள் மாயம்

கோம்பாக்: லெபோ உத்தாமா ஸ்ரீ கோம்பாக்கில் இருந்து பத்து கேவ்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு டிரக்  வேனின் பின்புறத்தில் மோதியதில் சாலையில் தூக்கி எறியப்பட்டு அவ்வழியே வந்த லோரி  மீது  மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்தார். விபத்தில் சம்பந்தப்பட்ட வேன் மற்றும் லோரி ஓட்டுநர்கள் அந்த இடத்தில் நிற்காமல் சென்று விட்டனர்.

இந்த விபத்து குறித்து தனது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் நூர் அரிபின் முகமட் நசீர் தெரிவித்தார்.சம்பவத்தின் போது, ​​பாதிக்கப்பட்ட 48 வயதான மலேசியர், ஸ்ரீ கோம்பாக்கிலிருந்து  பத்து கேவ்ஸ் நோக்கி ஹோண்டா வேவ் வகை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்ததும், அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் இடதுபுறப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நிசான் ஊர்வன் வேனின் பின்புறத்தில் மோதியது. இதனால் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு லோரி மீது மோதியதில் உயிரிழந்தார்.

நூர் அரிஃபின் கூறுகையில், வேன் மற்றும் லோரி டிரைவர் விபத்து நடந்த இடத்தை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக செலாயாங் மருத்துவமனை உறுதிப்படுத்தியது. பாதிக்கப்பட்டவரின் உடல் நடவடிக்கைக்காக செலாயாங் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

அவர் கூறுகையில், விபத்தில் சிக்கிய இரு வாகனங்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41(1)ன் படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தைப் பார்த்தவர்கள் அல்லது தகவல் அறிந்தவர்கள், விசாரணைக்கு உதவ போக்குவரத்து புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் முகமது ஷைபுதீன் முகமது நோர் அல்லது 017-6645812 அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here