கோலாலம்பூர்,

Five Star Trading (FST) மற்றும் Lotus Five Star (LFS) Cinemas இணைந்து பெட்டாலிங் ஜெயாவிலுள்ள திரையரங்குகளில், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ராஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 26 மணி 59 நிமிடங்கள் தொடர்ச் சியாக திரையிடப்பட்டு, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்த சாதனை மலேசிய சினிமா வரலாற்றில் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது மிகவும் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயமாகும்,
இந்த சாதனை கடந்த சனிக்கிழமை காலை 11.15 மணி முதல் (ஆகஸ்ட் 19) முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை (ஆகஸ்ட் 20) தொடர்ச்சியாக 26 மணி 59 நிமிடங்கள் திரையிடப்பட்டது.


மேலும் குறித்த நேரத்திற்குள் மொத்தம் 600 பேர் அந்த படத்தை பார்த்ததும் ஒரு சாதனையாக பதிவானது.
ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டபோது ரஜினிகாந்தின் மற்றுமொரு வெற்றித்திரைப்படமான பாடிஷா திரைப்பட மும் திரையிடப்பட்டது சினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் கொடுத்ததை காண முடிந்தது என்று, LFS trading நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் சாய் சுதன் கூறினார்.
ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்ட ஜெயிலர் திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூலை ஈட்டிவருகிறது. Five Star Tradingஇன் அறிக்கையின்படி, இந்த திரைப்படம் மலேசியாவில் மட்டும் திரையிடப்பட்ட ஐந்து நாட்களுக்குள் RM10 மில்லியனுக்கு மேல் வசூலை அள்ளி குவித்துள்ளதாம்.




















