குவாந்தான்:
சுங்கை லெம்பிங் நகரில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, முதியவர் ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக நம்பப்படுகிறது.
கடையின் உரிமையாளரான லீ யீ சோங், 62, என்ற காணாமல்போன முதியவர் இரவு 7 மணியளவில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது என்று, குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கள் கடையிலிருந்து வீடு திரும்புவதற்காக சாலையின் மறுபுறத்தில் இருந்த காருக்குச் செல்வதற்காக இடுப்பு அழவு ஆழமான நீரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
“அப்போது வெள்ளத்திம் நடுவில் இருந்த பாதிக்கப்பட்டவர், வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.








