நாட்டில் சுமார் 10.07 மில்லியன் பேர் 5G இணையத்தை பயன்படுத்துகின்றனர்

கோலாலம்பூர்:

இந்தாண்டு ஜனவரி 31 நிலவரப்படி மலேசியாவில் கிட்டத்தட்ட 10.07 மில்லியன் பேர் 5G இணைய சேவையை பயன்படுத்துகின்றனர், இது மொத்த சனத்தொகையில் 29.9 விழுக்காடாகும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

இருப்பினும், அனைத் கைத்தொலைபேசி நெட்வொர்க் வழங்குநர்களும் எதிர்காலத்தில் தங்கள் பயனர்களின் தேவைகளுக்கு அதிக உணர்திறன் மற்றும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“அதிக வேகம் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடவே பொறுப்பும் வருகிறது என்று அவர் சொன்னார்.

“நாங்கள் வேகமான, நம்பகமான மற்றும் மலிவான இணையம் மற்றும் சிறந்த தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும், ஆனால் இது சிறந்த சேவையுடன் வர வேண்டும்,” என்று அவர் இன்று Maxis 5G-மேம்பட்ட சோதனை நிகழ்ச்சியின்போது தனது உரையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here