அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த இந்தியப் பணியாளர்களை இழிவுபடுத்தும் இனவெறி கார்ட்டூனுக்கு வலுக்கும் எதிர்ப்பு

நியூயார்க்:

மீபத்தில் அமெரிக்காவில் பாலத்தில் மோதி கப்பல் விபத்துக்குள்ளானது தொடர்பில், அப்போது கப்பலில் இருந்த இந்தியப் பணியாளர்கள் செய்வதறியாது திகைப்பது போன்ற வகையிலான இனவெறி கார்ட்டூன் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தக் கேலிச்சித்திரம் தொடர்பில் உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் பால்டிமோர் நகர துறைமுகத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் பிரான்சிஸ் ஸ்காட் கீ என்ற பாலத்தை 22 இந்தியப் பணியாளர்கள் கொண்ட சரக்குக் கப்பல், கடந்த 26ஆம் தேதி கடக்க முயற்சித்தது.

நள்ளிரவில் திடீரென மின்னணு சாதனங்கள் செயலிழந்த நிலையில், சிக்கலை சரிசெய்து மீண்டும் கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இதனால் கப்பல் மோதியதில் அந்தப் பாலம் நொறுங்கி ஆற்றில் விழுந்தது. இருப்பினும் பாலத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 பேர் மாயமான நிலையில், இருவர் உடல் மட்டும் மீட்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் foxford comics என்ற தளம், கப்பலில் பயணித்த இந்தியர்களின் வெப்காமிக் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.

அரை நிர்வாணத்துடன் கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் வகையில் இந்தியர்கள் இருப்பது போன்ற இந்த காமிக் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியர்களை இனவெறியாக தாக்கும் வகையில் மட்டுமின்றி, கப்பல் பணியாளர்களை குறைமதிப்பிற்கு இது உட்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here