தொழிலாளர்களுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்புத் திட்டம்- சொக்சோ மட்டுமே

கோலாலம்பூர்:

அண்மையில் கொண்டாடப்பட்ட தொழிலாளர் தினமானது ஒவ்வொரு தொழிலாளர்களின் உள் இருக்கும் உணர்வுகைள வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. ஆனாலும் தொழிலாளர் தினத்திற்காக வழங்கப்படும் ஒரு நாள் விடுமுறையானது தொழிலாளர்களின் முனைப்பு, பங்களிப்பின் விகிதம் மீதான உண்மையான அங்கீகாரத்தை வெளிக்காட்டாமல் போகலாம்.

இருப்பினும் நாடு முழுவதும் உள்ள 17.1 மில்லியன் தொழிலாளர்களின்நலனை உயர்த்ததிப் பிடிப்பதில் மனிதவள அமைச்சு பொறுப்புடைமை கொண்டுள்ளது. Pekerja KESUMA Bangsa எனும் கருப்பொருளுக்கு ஏற்ப திறன், நலன், செயலாக்கம் ஆகிய 3கே முதன்மை அம்சங்களில் மனிதவள அமைச்சின் பொறுப்புடைமையை சொக்சோ வரவேற்று ஆதரவு தருவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி முகமட் அஸ்மான் அஸிஸ் கருத்துரைத்துள்ளார்.

அண்மையில் மலேசிய தொழிலாளர் சம்மேளன காங்கிரஸ் (எம்டியுசி) உட்பட கெசுமா அமைச்சர், முக்கிய தரப்பினரின் வலியுறுத்தலுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வளையத்தை அதிகரிப்பதில் சொக்சோ முனைப்புக்காட்டுகின்றது.

இந்த வலுவான பாதுகாப்பு வளையமானது வேலைக்கு அப்பாற்பட்டு நேரத்தில் விபத்துகளில் சிக்கினால் கூட தங்களின தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வழி வகுக்கின்றது.

உதாரணத்திற்கு 100 மலேசியர்கள் எண்ணிகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் சொக்சோ தரப்பு தொழில்சாரா விபத்துகளுக்கான 54,062க்கும் மேற்பட்ட விண்ணபங்களை நிராகரிக்க நேரிட்டுள்ளது.

குறிப்பாக ஓராண்டில் ஒவ்வொரு 20 விண்ணப்பங்களிலும் ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக விகித கணக்கு கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமன்றி 2023 கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின் மீட்சி காலகட்டத்தில் விபத்துகள் சம்பந்தப்பட்ட இழப்பீட்டு விண்ணப்பங்கள் பெருமளவு அதிகரித்திரிந்தது.

குறிப்பாக கோவிட்-19 தொடர்புடைய இழப்பீட்டு விண்ணப்பங்களை காட்டிலும் இந்த விபத்து தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் 5 மடங்கு அதிகரித்திருந்தது. தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் பெரும் அபாயமாக இல்லாத நிலையில் மலேசியா பல ஆண்டுகளாக இருந்து வரும் பொதுசுகாதார பிரச்சினைகளில் மீண்டும் கவனம் செலுத்துகிறது. ஆனால் , இந்த அச்சுறுத்தல் அதிகரிப்பை எதிர்கொள்வதற்கு எந்த அளவில் நாம் பாதுகாக்கப்படுகின்றோம்

கடந்த 2022ஆம் ஆண்டு மலேசிய வாழ்நாள் காப்புறுதி சங்கத்தின் தரவின் படி மலேசிய மக்களுள் ஏறத்தாழ 46 விழுக்காட்டினர் சுய சுகாதாரார காப்புறுதியை கொண்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

காப்புறுதிக்ககான சந்தா தொகை அதிகம் என்பது இந்த சூழலுக்கான முதன்மை காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில் சொக்சோ பரிந்துரை செய்யும் சமூக காப்புறுதி திட்டமானது ஆள்பல அம்சங்களை கடந்த பொருளாதார கட்டணத்தை வழங்குகின்றது.

குறிப்பாக ஒருங்கிணைந்த சந்தாவானது காப்புறுதி மாத சந்தா, கட்டணத்தை குறைப்பது மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்குமான பாதுகாப்பு அடைவுநிலை தரத்தை உயர்த்துகின்றது.

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டமானது சம நிலை இடையிலான வரையை குறைக்கின்றது. மாறாக எந்த நேரத்திலும்பாதுகாப்பு கிடைப்பதில் தொழிலாளர்கள்யாரும் விடுபடாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றது.

உதாரணத்திற்கு பணியிடத்தில் தொழிலாளர் ஒருவர் விபத்தில் சிக்கினால் அதற்கான சிகிச்சை செலவுகளை பணியிட பேரிடர் திட்டம் சட்டப்பிரிவு நான்கின் அடிப்படையில் சொக்சோ தரப்பே ஏற்றுக்கொள்ளும். ஆனால் வீட்டில் இருந்தபடி வேலை செய்பவர்களும் ஆங்காங்கே சென்று வேலை செய்து வருபவர்களும் விபத்தில் சிக்கினால் எப்படி பாதுகாக்கப்படுவர்.

எனவேதான் விபத்து நிகழ்ந்த இடம், நேரத்தை கணக்கில் கொள்ளாமல் முழுவதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு இந்த பேரிடர் காப்புறுதி தேவை ஏற்படுகின்றது. மேலும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு முன்னேற்ற அம்சம் மட்டுமல்லாது அந்நிய முதலீட்டாளர்களை கவரும் இடமாகவும் நம் நாடு உருவாகக் கூடிய வல்லமை கொண்டுள்ளது.

இதில் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாக தரம் உயர்த்துவதில் சமூக அம்சங்களை வலுப்படுத்துவதற்கு இந்த சமூகப் பாதுகாப்பு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. எனவே மலேசிய தற்போதைய இடைவெளி விவகாரத்தை எதிர்கொள்ளும் முயற்சி மட்டுமல்லாது ஒவ்வொரு தொழிலாளர்களின தன்மானத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மலேசிய சமூகப் பாதுகாப்பு அவசியமாகின்றது.

இந்த இலக்கானது நமது ஆள்பல பங்களிப்பிற்கு மதிப்பளிப்பது மட்டுமன்றி அனைத்துலக ரீதியில் முழுமையான வளர்ச்சி, பொறுப்புடைமையை பூர்த்தி செய்வதில் மலேசியா தயார்நிலையில் இருப்பதற்கும் வித்திடுகின்றது என்று முகமட் அஸ்மான் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here