சிலியில் உள்ள ஒரு குடும்பம், ஜெர்சி மற்றும் கோப்பைகளால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகே கோபா அமெரிக்க கால்பந்து போட்டியைக் காண இறுதிச் சடங்குகளை நிறுத்தியது. வினோதமான நிகழ்வுகளில் ஒன்றாக, தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக இறுதிச் சடங்குகளை நிறுத்தியது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது மற்றும் இந்த வீடியோ குறித்து இணையத்தில் பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வைரலாகும் இந்த வீடியோவில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர்கள், சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து பிக் ஸ்கிரீன் ப்ரொஜெக்டரில் சிலி மற்றும் பெரு இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியை பார்ப்பதைக் காணலாம். மேலும், மொராக்கோ வேர்ல்ட் நியூஸ் படி, இந்த சவப்பெட்டியானது பூக்கள், கோப்பை மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சவப்பெட்டிக்கு அருகில் பிரேயர் ஹாலில் உள்ள ஒரு சுவரொட்டியில் எழுதியிருந்ததாவது, ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு அளித்த அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களையும், உங்கள் காண்போரின் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.









