பெந்தோங்:
கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இங்குள்ள லூரா பிலுட்டில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து படிவம் 5 மாணவி ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர், அவர் காணாமல் போய்விட்டதாக ஜூலை 17 அன்று அதிகாலை 12.15 மணியளவில் போலீசில் புகார் அளித்தனர் என்று, பெந்தோங் மாவட்ட காவல்துறையின் தலைவர், கண்காணிப்பாளர் ஜெய்னம் முஹமட் கஹார் தெரிவித்தார்.
Nur Aina Faqihah Shahrizan, 17, என்ற சிறுமி கடைசியாக திங்கட்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய போது அவரது தங்கையை பார்த்ததாக அவர் சொன்னார்.
கம்போங் லாமாவில் வசிக்கும் நூர் ஐனா ஃபகிஹா, சுமார் 165 செமீ உயரம் கொண்டவர் என்று அவர் கூறினார்.
குறித்த சிறுமியைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 09-223 1999 என்ற எண்ணில் பெந்தோங் போலீஸ் தலைமையகத்தை அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.






















