கோலாலம்பூர்:
உலகில் அதிக செல்வாக்குமிக்க கடப்பிதழ்கள் வரிசையில் மலேசியாவிற்கு 12 ஆவது இடம் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஹென்லி கடப்பிதழ் குறியீட்டின்படி, மலேசியா 11 ஆவது தரவரிசையிலிருந்து ஒரு இடம் சரிந்து 12வது இடத்திற்கு வந்துள்ளது.
2014 இல் மலேசிய கடப்பிதழ் 8 வது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் உலகளவில் 227 இடங்களில் 182 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
உலகிலேயே ஆக செல்வாக்குமிக்க கடப்பிதழ் பட்டியலில் சிங்கப்பூர் கடப்பிதழ் முதலிடம் வகிக்கிறது. இது 227 பயண இடங்களில் 195 இடங்களுக்குச் சிங்கப்பூரர்கள் விசா இன்றி செல்லலாம்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கடப்பிதழ் எட்டாவது இடத்தில் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.





















