கலவரபூமியாக மாறி இருக்கும் வங்காளதேசத்தில் சிக்கி இருக்கும் மலேசியர்களில் 123 பேர் சிறப்பு விமானத்தின் மூலம் மலேசியா வந்தடைந்தனர். அவர்களில் 80 பேர் அந்நாட்டிற்கு கல்வி பயில சென்ற மாணவர்களாவர்.
மாபெரும் போராட்டங்களும் ஆரப்பாட்டங்களும் வெடித்துள்ள வங்காளதேசத்தில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால் அங்கிருந்து மலேசியர்களை நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்தார்.
வங்காளதேசத்தில் சமீபத்தில் வெடித்திருக்கும் புரட்சி போராட்டத்திற்கு இதுவரையில் 150 பேர் பலியாகியுள்ளனர், இந்நிலையில் பிரத்தியேகமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஏர் ஆசியா 320 விமானத்தின் வாயிலாக நேற்று முன்தினம் மாலை 4,57 மணியளவில் அந்த 123 மலேசியர்களும் கே.எல்.ஐ.ஏ 2வது விமான நிலையத்தை வந்தடைந்தனர்.




















