வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களைக் கட்டுவதற்கான இரண்டு விண்ணப்பங்களை அங்கீகரித்தது பினாங்கு

ஜார்ஜ் டவுன்:

தெலுக் கும்பாரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான இரண்டு விண்ணப்பங்களுக்கு பினாங்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

பினாங்கு மாநிலத் திட்டக் குழுவால் சான்றளிக்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில், தெலுக் கும்பார் பகுதியில் 32,680 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று மாநில உள்ளாட்சி, நகர மற்றும் கிராமத் திட்டமிடல் குழுவின் தலைவர் H’ng Mooi Lye தெரிவித்தார்.

”தொழிலாளர் தங்கும் விடுதிகளின் 27 மாடி கட்டிடத் தொகுதியை உள்ளடக்கியது என்றும், முதல் மட்டத்தில் ஆறு யூனிட் கடைகள், முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் பொழுதுபோக்கு வசதிகள் உட்பட 26 தளங்களில் தொழிலாளர்களின் தங்குமிடங்கள் கொண்டதாக நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் இன்று நடந்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

தெலுக் கும்பாரில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தங்குமிடங்களின் கட்டுமானத்தின் நிலை குறித்து முகமட் ஷுகோர் ஜகாரியாவின் (பாஸ்-பூலாவ் பிடோங்) கேள்விக்கு H’ng இவ்வாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here