கோலாலம்பூர்:
வரும் ஜூலை 29 முதல் அனைத்து தேசியப் பதிவுத் துறை (JPN) அலுவலகங்களிலும் குழந்தைகளுக்கான MyKid எனப்படும் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.
முன்னதாக MyKid விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அட்டைகளுக்கான சிப் விநியோகம் இல்லாததால் அது வழங்கப்படாமல் நிருத்தப்பட்டிருந்தது என்று JPN வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
தற்போது அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், முன்னர் விண்ணப்பித்தவர்கள் (MyKid விண்ணப்ப ரசீது வைத்திருப்பவர்கள்), www.jpn.gov.my இல் உள்ள அதிகாரப்பூர்வ NRD போர்ட்டலில் அச்சிடப்பட்டதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அது கூறியது.























