கோத்தா கினபாலு:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, சபாவில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 217 குடும்பங்களைச் சேர்ந்த 695 பேராகக் குறைந்துள்ளது.
“வெள்ளத்தால் மொத்தம் 19 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன: பியூஃபோர்ட்டில் 10 மற்றும் சூக்கில் 9 கிராமங்களும் அடங்கும்” என்று சபா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



















