மத்தியப்பிரதேசத்தில் ரூ.1800 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1814 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின்போது இந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here