கூகுளைச் சந்தித்த பிரதமர்; AI மற்றும் தரவு மைய அமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

லிமா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று பெருவின் தலைநகரில் கூகுள் நிறுவனத்துடன் நடந்த ஒரு சந்திப்பில் தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

AI மற்றும் தரவு மைய சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக தரவு கசிவு மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் சுரண்டப்படுவதைத் தடுக்க தொடர்புடைய விதிகள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

“எனவே, இந்தப் பாதிப்பை மலேசியாவில் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் கூகுளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான கரண் பாட்டியாவை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கூறினார்.

முன்னதாக, அவர் APEC வர்த்தக ஆலோசனைக் குழுவின் (ABAC) மலேசியாவின் தலைவர் டத்தோ ரூபன் எமிர் ஞானலிங்கம், வெஸ்ட்போர்ட் நிர்வாகத் தலைவரும் வழங்கிய மதிய விருந்தில் APEC பொருளாதாரங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்களுடன் அவர் சந்தித்து, கலந்துரையாடினார்.

இந்த அமர்வின் போது, ​​தான் அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு விஷயங்களில் மலேசியாவின் அபிலாஷைகளைப் பகிர்ந்து கொண்டதாகவும், அத்துடன் மலேசியாவில் முதலீடு செய்ய அவர்களை அழைத்ததாகவும்,” பிரதமர் கூறினார்.

நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் அன்வார், மலேசியாவின் வணிகச் சூழலை மிகவும் போட்டித்தன்மையடையச் செய்வதற்கான மடானி அரசாங்கக் கொள்கைகளையும் வணிக வசதிக்கான அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here