பாலிக் பூலாவ்:
இன்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து இங்குள்ள ஜாலான் கம்போங் ஆயிர் பூத்தேயில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அங்கு ஏற்பட்ட 0.3 மீட்டர் உயர வெள்ளத்தில், கீழ்நோக்கி அமைந்துள்ள நான்கு வீடுகள் நீரில் மூழ்கியதாக பாலிக் பூலாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு பிற்பகல் 3.53 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
இத்திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அவர்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்படவில்லை என்று கூறிய அவர், கனமழை காரணமாக மலை அடிவாரத்தில் அமைந்திருந்த பள்ளமான இடமே திடீர் வெள்ளப்பெருக்குக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
“இதனால் வடிகால்களில் தண்ணீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்தது என்றும், சம்பவ இடத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




















