இன்ஜின் இயங்கிக் கொண்டிருந்த காரில் தாயும் மகளும் இறந்து கிடந்தனர்

ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பள்ளியின் முன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று இரவு 10 மணியளவில் ஒரு தாயும் அவரது குழந்தையும் இறந்து கிடந்தனர்.  பள்ளியின் முன் நிறுத்தப்பட்டிருந்த BMW காரின் இன்ஜின் இயங்கி கொண்டிருந்தது. அக்காரில் 42 வயது பெண் மற்றும் அவரது 14 வயது குழந்தை மயக்கமடைந்த நிலையில் இருந்ததை வழிப்போக்கர்கள் கண்டுபிடித்து, இரவு 10 மணியளவில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்றும் ஜோகூர் பாரு உத்தாரா காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இன்ஜினின் பெட்ரோல் லைனில் ஏற்பட்ட கசிவால் அவர்களின் இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது கார்பன் மோனாக்சைடு விஷத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் கடைசி உரையாடல் தனது நண்பர்களுடனான ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருந்தது. அங்கு அவர் அந்தப் பகுதியில் ஷாப்பிங் முடித்துவிட்டதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் சாலையில் நின்றதாகவும் கூறினார்  என்று பால்வீர் கூறினார். உயிரிழ்ந்தவருக்கு மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர் பாக்கார் பத்துவில் வசிக்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here