அச்சுரிமை, பதிப்புரிமைச் சட்டத்திற்கு எதிராக அமைச்சரிடம் மகஜர்

உள்துறை அமைச்சின் கீழ் உள்ள 1984ஆம் ஆண்டு அச்சுரிமை, பதிப்புரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதை எதிர்த்து நேற்று மூன்று ஊடக அமைப்புகள் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸிலிடம் மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தன.

PM pledges fair review of Printing Presses and Publications Act amid media concerns

இவ்விவகாரம் உள்துறை அமைச்சின் கீழ் இருந்தாலும்கூட தொடர்புத்துறை அமைச்சர் எனும் முறையில் தாம் இவ்விவகாரத்தை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்போவதாக ஃபாமி ஃபட்ஸில் கூறினார்.

நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தைக் காப்பதற்கும் அது சீரான முறையில் செயல்படுவதற்கும் நல்லதொரு சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதே முக்கியம் என அவர் நேற்று மகஜரைப் பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

UPDATED] Free speech curtailed during Dr M's time, not now, says Fahmi

நேற்று நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் உட்பட பிரதமரின் பத்திரிகைச் செயலாளர் துங்கு நஸ்ருல் துங்கு அபாய்டாவிடம் இந்த மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனிடையே மலேசிய ஊடக மன்றத்தின் சட்டமசோதாவைத் தற்போது நடைபெற்று வரும் மக்களவைக் கூட்டத்தில் முதல் வாசிப்புக்காக தமது அமைச்சு சமர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அமைச்சர் ஃபாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here