நாட்டில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு பிரதமர் வருத்தம்

நாடு தற்போது நீரிழிவு நோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையை எதிர்நோக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுத் தெரிவித்தார்.

அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் மலேசியாவும் அடங்கும் என நிதி அமைச்சருமான அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து மக்கள் சீனியைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

Hari Diabetes Dunia 2024: Indonesia Nomor 3 dengan Penderita Pra-Diabetes  Terbanyak di Dunia

தொடக்கத்தில் கிளாந்தான் மாநிலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் நெகிரி கெடா மாநிலங்களிலும் அதிகமானோர் இந்நோயால் பீடிக்கப்பட்டத ட்டதாக அவர் தெரிவித்தார். இந்த நீரிழிவு நோய்க்காக நாம் போட்டி போடக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். நீரிழிவு நோயைக் குறைப்பதற்கு சரியான வழி சீனியைக் குறைப்பதாகும். எனவே மக்கள் இதனைக் கடுமையாகக் கருத வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Understanding the 3 Types of Diabetes

நேற்று மேலவையில் 2025ஆம் ஆண்டுக்கான விநியோகச் சட்டமசோதாவை இரண்டாம்கட்ட வாசிப்புக்காக தாக்கல் செய்து உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் விற்பனை செய்யும் பானங்களில் 50 விழுக்காட்டுச் சீனியைக் குறைக்குமாறு அவர் பரிந்துரை செய்தார்.

Diabetes - The Nutrition Source

இதனைப் பிரதமர் இலாகா ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. எனவே நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு முன்மாதிரியாக விளங்கும் வகையில் இதனை நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கும் அமல்படுத்துவது அவசியமாகும் என அவர் கூறினார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி சீனியைக்கொண்ட குளிர்பானங்களுக்கான கலால் வரியை அரசாங்கம் உயர்த்தும் பரிந்துரைக்கு இது சம்பந்தமில்லை என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here