சமீபத்தில் நடந்த அமலாக்க நடவடிக்கையின் போது கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரியை கடித்ததற்காக ஒரு பெண்ணுக்கு நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. 30 வயதான அந்த மாது மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
அரசு ஊழியரைத் தடுத்ததற்காக அந்தப் பெண் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தால் அவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது. மேலும்15 முதல் 39 வயதுக்குட்பட்ட மூன்று ஆண் சந்தேக நபர்கள், ஒரு பொது ஊழியரைத் தடுத்தன் தொடர்பில் துணை அரசு வழக்கறிஞருக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று சுலிஸ்மி கூறினார். புதன்கிழமை இரண்டு தனித்தனி வழக்குகளில் உரிமம் பெறாத வர்த்தகர்களின் தாக்குதல்களில் கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்க அதிகாரிகள் காயமடைந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், அமலாக்க நடவடிக்கையின் போது, மூன்று பெண் கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்க அதிகாரிகள் அமைதிப்படுத்த முயன்றபோது ஒரு பெண் வியாபாரி, அவர்களை நோக்கி கத்துவதைக் காட்டியது. கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்க அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வாகனத்தைக் கைப்பற்ற முயன்ற பிறகு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.









