பள்ளியை அண்மித்த பகுதிகளில் வேக வரம்பு 30km/h ஆகக் குறைப்பு- போக்குவரத்து அமைச்சர்

சிரம்பான்:

ள்ளி மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பள்ளியை அண்மித்த பகுதிகளில் வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு எல்லை மணிக்கு 50km/h கிலோமீட்டரிலிருந்து  30km/h  ஆகக் குறைக்கப்படுகிறது.

இதனை அரசாங்கம் விரைவில் அரச இதழில் வெளியிடும் என்றும் புதிய வேக வரம்பு தற்போது வர்த்தமானியில் வெளியிடப்படும் பணியில் உள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

மேலும் இதுதொடர்பான கொள்கை முடிவு ஏற்கனவே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான அமைச்சரவைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அத்தோடு இந்த நடவடிக்கை, பாதுகாப்பான பள்ளிச் சூழலை உருவாக்க எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

ஏனெனில் இந்தப் பகுதிகளில் சாலை விபத்துக்கள், குறிப்பாக பள்ளிக்கு நடந்து செல்லும் அல்லது மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகள் அதிகமாக பதிவாகியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here