கோலாலம்பூர்,
நீதித்துறையின் தலைமை நீதிபதியாக (Chief Judge of Malaya – CJM) பணியாற்றி வரும் டான் ஸ்ரீ ஹஸ்னா மொஹம்மட் ஹாஷிம், தற்போதைக்கு நாட்டின் தலைமை நீதிபதியாக (Chief Justice – CJ) இடைக்காலமாக பொறுப்பேற்றுள்ளார். எனினும், அவர் தானும் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார்.
மலேசிய நீதித்துறை முழுவதும் பின்வரும் நான்கு உயர்நிலை நீதிபதிகள் உள்ளனர்:
மலேசியா தலைமை நீதிபதி (Chief Justice – CJ) – தற்போது காலியாக உள்ளது
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (President of the Court of Appeal – PCA) – காலியாக உள்ளது
மலாயா தலைமை நீதிபதி (Chief Judge of Malaya – CJM) – ஹஸ்னா தற்போது பதவி வகிக்கிறார்
சபா & சரவாக் தலைமை நீதிபதி (Chief Judge of Sabah and Sarawak – CJSS) – தற்போது தான் ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லி, இவர் ஜூலை 24-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்
துன் தெங்கு மைமுன் துவான் மாட், கடந்த ஜூலை 1 அன்று 66வது வயதில் ஓய்வு பெற்றதையடுத்து CJ பதவி காலியாகி உள்ளது. அதேபோல், PCA பதவியும் டான் ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் கடந்த ஜூலை 2 அன்று ஓய்வு பெற்றதால் காலியாகி விட்டது.
இவர்கள் இருவரும் 66 வயதை எட்டியதால், அரசால் மேலும் காலம் நீட்டிக்கப்படாமல் ஓய்வுபெற்றுள்ளனர்.
டான் ஸ்ரீ ஹஸ்னா , மே 15, 2025 அன்று 66வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அக்டோபர் 14, 2025 வரை ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, தற்போது CJ-ன் பொறுப்பையும், CJM-ன் நிர்வாகப் பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் வகிக்கிறார்.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதி மற்றும் PCA யார் என்ற விவரம் இதுவரை அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை.





















