பிரான்ஸ் அதிபர் எம்யுவேல் மாக்ரோனை பிரதமர் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார்

YAB Perdana Menteri, Dato' Seri Anwar Ibrahim, semasa Majlis Ramah Mesra bersama Diaspora Malaysia di Perancis semasa lawatan kerja di Paris. 3 Julai 2025. AFIQ HAMBALI/Pejabat Perdana Menteri.NO SALES; NO ARCHIVE; RESTRICTED TO EDITORIAL USE ONLY. NOTE TO EDITORS: This handout photos may only be used for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the image or facts mentioned in the caption. Reuse of the pictures may require further permission. MAN

பாரிஸ்,

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரான்ஸ் அரசாங்கத்தின் அரச மரியாதை வரவேற்புடன், இன்று அங்குள்ள அதிபர் எம்யுவேல் மாக்ரோன் மற்றும் பிரதமர் பிரான்ஸ்வா பய்ரூ ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.

இச்சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, புதுச்சக்தி, பாதுகாப்பு, கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகள் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.

மேலும், காசாவில் உள்ள மனிதாபிமான நெருக்கடியைப் பற்றியும் இருநாட்கள் ஆலோசிக்க உள்ளனர். பிரான்சில் உள்ள பாரிஸ் பெரிய மஸ்ஜிதில் ஜும்மா தொழுகையிலும் அன்வார் பங்கேற்க உள்ளார்.

பின்னர் பிரபல சோர்போன் பல்கலைக்கழகத்தில் “தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா: புதிய ஒத்துழைப்பு வழிமுறைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார். அவரது பிரான்ஸ் பயணத்திற்குப் பின்னர், ஜூலை 5-7 வரை பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க பிரேசிலை நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here