தங்காக்.
நேற்று 16 ஜூலை 2025 அன்று, தங்காக் மாவட்ட போலீசாருக்கு, 55 வயதுடைய மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர், TikTok செயலியில் பரிசு விழாவுக்கான போட்டியில் கலந்து கொண்டு ஏமாற்றப் பட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்பதன்வழி அதிக வருமானம் கிடைக்கும் என்று அவரிடம் உறுதி அளிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்மணி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பத்தில், அந்த விளம்பரத்தை TikTok செயலியில் பார்த்ததும், அவர் அந்த போட்டியில் பங்கேற்றார். பின்னர், சந்தேக நபர் தம்மை போட்டி ஏற்பாட்டாளராக அறிமுகப்படுத்தி, “WhatsApp” மூலமாக தொடர்பு கொண்டதாகவும், அதன் பின்னர் பணத்தை வைப்பிலிட சொன்னதாகவும், பாதிக்கப்பட்ட பெண் 12 முறை மொத்தமாக RM 26,060.00 தொகையை 6 வேறுபட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார் எனவும் தங்காக் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி சூப்ரிண்டன் ரோஸ்லான் பின் முகமாட் தலீப் தெரிவித்தார்.
இந்த வழக்கு சிக்கன சட்டத்தின் பிரிவு 420 கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 வருடம் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும்
பொதுமக்கள் இம்மாதிரியான இணையவழி மோசடிகளில் சிக்காமல் இருக்க எப்போதும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
















