பெர்லிஸில் ஆகஸ்ட் 1 முதல் மின்னியல் சிகரெட் விற்பனைத்தடை அமல்

Close up on a man exhaling vapor from an electronic cigarette

கங்கார்:

பெர்லிஸ் மாநிலத்தில் மின்சிகரெட் விற்பனைக்கு ஆகஸ்ட் 1 முதல் முழுமையான தடை அமல்படுத்தப்படவுள்ளது என்று கங்கார் நகராட்சி மன்றத் தலைவர் அப்பெண்டி ராஜினிகாந்த் தெரிவித்தார்.

இதனை உறுதிச்செய்யும் வகையில் செப்டம்பர் 1 முதல் கடுமையான கண்காணிப்பு மற்றும் வணிக உரிமம் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டு பெர்லிஸ் மாநில சமய அமலாக்க குழு மின்சிகரெட்டுகளை ஹராம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here