கோலாலம்பூர்:
ஓட்டுநர் உரிமத்தை (Driving Licence) மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்க தவறியவர்கள், இனி RON95 எரிபொருள் மானியத்தை பெற தகுதியற்றவர்கள் என்று சாலைப் போக்குவரத்து துறை (JPJ) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் JPJ அளித்த விளக்கத்தில்,
உரிமம் செல்லுபடியாக இல்லாமல் மூன்று ஆண்டுகளை கடந்தால், அந்த ஓட்டுநர்கள் தங்களின் பதிவுகள் தானாகவே ரத்து செய்யப்படும்.
உரிமத்தை மீண்டும் பெற, அவர்கள் புதிய ஓட்டுநர் தேர்வை எழுத வேண்டும்.
அதனால், உரிமம் இல்லாதவர்கள் RON95 மானியத்திற்குத் தகுதியற்றவர்கள் என சாலைப் போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது.

மாநில அரசின் எரிபொருள் மானிய திட்டம் முறையாக செயல்படுவதற்காக, சம்பந்தப்பட்ட தரவுகள் JPJ-இன் பதிவுகளோடு இணைக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன.
செப்டம்பர் 22 அன்று BUDI95 நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, சாலைப் போக்குவரத்து துறை (JPJ) மொத்தம் 26,991 CDL (Competent Driving Licence) புதுப்பிப்பு பரிவர்த்தனைகள் பதிவு செய்துள்ளது.
இந்தப் பரிவர்த்தனைகள் MyJPJ செயலி, MySikap தளம், கியோஸ்க்குகள் மற்றும் JPJ கவுண்டர்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















