அன்வார்: காசா நோக்கிச் செல்லும், உலகளாவிய, கப்பல்களின் பாதுகாப்பிற்காக, இத்தாலி, ஸ்பெயினுக்கு நன்றி!

கோலாலம்பூர்:

`குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலா’ (Global Sumud Flotilla) கப்பலை, பாதுகாப்பதற்காக, தங்கள், கடற்படைக், கப்பல்களை, அனுப்பியதற்கு, இத்தாலி மற்றும் ஸ்பெயின் (Italy and Spain) நாடுகளுக்கு, பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim), தனது, நன்றியை, தெரிவித்துள்ளார்.

`எக்ஸ்’ (X) சமூக, வலைதளத்தில், பதிவிட்ட அன்வார் Mediterranean கடல் வழியாக உணவு மருந்துப் பொருட்கள் மற்றும் அமைதிக்கான செய்தியை சுமந்து செல்லும் 45 நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களில் உள்ள 34 மலேசியர்களுக்கும், தனது ஆதரவை தெரிவித்தார்.

இப்போது, கிரேக்கத்திற்கு (Greece) அருகில் சர்வதேச கடல் நீரில் இருக்கும் இந்தக் கப்பல் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் உட்பட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும் முற்றுகையை உடைப்பதையும் காசாவிற்கு, மனிதாபிமான வழித்தடத்தை (humanitarian corridor) கோருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உலகளாவிய குழு தொடர்ந்து காசாவிற்கு, ஆதரவாக, நிற்கிறது என்ற குறிப்பிட்ட, அன்வார், மலேசியாவின் முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here