கோலாலம்பூர்:
இன்று பினாங்கின் பாலிக் புலாவ் தென்மேற்கு மாவட்டத்தில் எட்டு மணி நேர நீர் விநியோக தட்டுப்பாடு ஏற்படும் என்று பினாங்கு நீர் விநியோக கார்ப்பரேஷன் PBAPP தெரிவித்துள்ளது.
இந்தத் தட்டுப்பாடு இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நீடிக்கும் என்றும் இதனால் 1200 பயணித்தாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்த நீர்த்தட்டுப்பாடு, Kuala Jalan Baru, Lorong Prestij 1 to 9, Solok Prestij 1 to 8, Apartment Prestij 3, Flat Taman Prestij 3, Pangsapuri Idaman Prestij ஆகிய இடங்களை பாதிக்கும் என்று PBAPP தெரிவித்துள்ளது.
எனவே தான் இந்த நீர் தட்டுப்பாடு காலத்தில் போதுமான நீர் இருப்பு இருப்பதை உறுதி செய்ய, இப்பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான நீரை சேமித்து வைக்குமாறு இது தொடர்பான அறிவிப்புகளை தெரிந்து கொள்வதற்கு PBAPP யின் பேஸ்புக் அகப்பக்கத்தை வலம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த நீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படும் பயனர்களிடம் PBAPP மன்னிப்பு கேட்டுக் கொண்டது.





















