திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாய், மகன் உயிரிழப்பு ; சபாவில் சம்பவம்

கினபடாங்கான்:

சபாவின் தொங்கோட், கம்போங் பங்க்கூலுட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு தாய் (79) மற்றும் அவரது 7 வயது மகன் உயிரிழந்தனர்.

நேற்று இரவு 9.46 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, 5 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது என்று, கினபடாங்கான் தீயணைப்பு நிலைய அதிகாரி ஹைரி ஓதூ தெரிவித்தார்.

இதோனேசியாவை சேர்ந்த தாய், மகன் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்காக வெள்ளம் சூழ்ந்த சாலையை கடந்தபோது, நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

சிறுவன் தாயின் கையிலிருந்து நழுவி நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும், வயதான அந்தப் பெண்ணும் சமநிலை இழந்து வெள்ளத்தில் விழுந்ததாக கூறப்பட்டது.

பெண்ணின் உடல் இன்று காலை 1.20 மணிக்கு, அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரம் சிறுவனின் உடல் காலை 4.02 மணிக்கு, சுமார் 200 மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டது.

இரு உடல்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பின்னர் நீர்மட்டம் குறைந்ததால் மக்கள் யாரும் இடம்பெயரவில்லை என்றும் ஹைரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here