இந்திய விமானப்படைக்கு மலை ரேடார்கள்; பெல் நிறுவனத்துடன் ரூ.1,950 கோடிக்கு ஒப்பந்தம்

புதுடெல்லி இந்திய ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயார் செய்து பயன்படுத்த ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக்-இன்-இந் தியா’ திட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது, இந்திய விமானப்படைக்காக 2 மலை ரேடார்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள், தேவையான உட்கட்டமைப்புகளை சுமார் ரூ.1,950 கோடிக்கு கொள்முதல் செய்வதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது

‘இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்தல்’ என்ற பிரிவின் கீழ் வரும் இந்த ஒப்பந்தம் நேற்று டெல்லியில் கையெழுத்து ஆனது. இந்த ரேடார்களை நிறுவி செயல்பாட்டுக்கு கொண்டுவருவது, நாட்டின் வான் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் வெளிநாட்டு உபகரணங்கள் மீதான சார்புநிலையை குறைக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here