கம்போங் சுங்கை பாரு நிலம் குறித்த சர்ச்சை: அமைச்சர் ஸாலிஹா விளக்கம்

கோலாலம்பூர், அக்டோபர் 9 –

கம்போங் சுங்கை பாரு நிலம் ஒருபோதும் மலாய் விவசாயக் குடியேற்றத்தின் அல்லது மலாய் ரிசர்வ் நிலமாக (Malay reserve land) அறிவிக்கப்படவில்லை என்று பிரதமர் துறை கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

கூட்டரசு பிரதேச நிலம், சுரங்க அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில், கிள்ளான் ஆற்றில் (Klang River) வெள்ளத்தைக் குறைப்பதற்காக சிலாங்கூர் அரசாங்கத்தால் 1967-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆற்றுச் சீரமைப்புத் திட்டத்தினால் இந்தக் கிராமம் உருவானது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினால் சுமார் 16 ஏக்கர் புதிய நிலம் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் கம்போங் சுங்கை பாரு என்று அறியப்பட்டது. மலாய் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்காக சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் PKNS-ஆல் இது உருவாக்கப்பட்டாலும், 219.91 ஏக்கர் மலாய் விவசாய குடியேற்ற MAS நிலத்துடன் இதற்கான அதிகாரப்பூர்வ பதிவுகள் எதுவும் இல்லை என்று
ஸாலிஹா உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here