பாடல் பாடி வட்டிக் கடனை அடைத்தார் எஸ்பி பாலா: மனோ

சென்னை:

“திரைப்படத்தில் ஒரு பாடல் பாடினால் சில ஆயிரம் மட்டுமே சம்பளம் கிடைக்கும். அந்த வருவாயால் ஒரு படத்தைத் தயாரிக்க முடியாது. அதனால், தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை,” என்று பின்னணிப் பாடகர் மனோ தெரிவித்துள்ளார்.

தனது மகன் துருவ் நாயகனாக நடிக்கும் ‘வட்டக்கானல்’ திரைப்படத்தைப் பற்றி பேசிய அவர், முன்னாள் பாடகர்கள் திரைப்படத் தயாரிப்பில் சந்தித்த சிரமங்களை எடுத்துக்காட்டினார்.

“என் அண்ணன் எஸ்பி பாலா, படம் தயாரித்தபோது ஏற்பட்ட கடனுக்காக, பாட்டுப் பாடி கிடைத்த வருவாயைக் கொண்டு வட்டி கட்டினார். அந்த அனுபவம் எனக்கு பாடுவதை மட்டுமே தொழிலாக வைத்திருக்கச் செய்தது,” என்றார்.

மேலும், வெளிநாட்டு நண்பர்கள் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடும்படி கூறியபோதும், நட்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அவர் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

“என் மகன் படத்திற்காக பாடகர் சங்கர் மகாதேவன், கார்த்திக் ஆகியோர் அன்புக்காகவே பாடியுள்ளனர். அவர்களுக்கு நன்றி,” என்றும் மனோ தெரிவித்தார்.

இதேபோன்று, எஸ்பி பாலாவின் மகன் எஸ்பிபி சரண் தயாரித்த சில படங்கள் வசூலில் தோல்வியடைந்தபோது, உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகள் நடத்தி, கிடைத்த வருவாயைக் கொண்டு தந்தை எஸ்பி பாலா கடனை அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here