உலு சிலாங்கூர், ஜாலான் பத்தாங் காலியில் இன்று மதியம் மரம் விழுந்து நான்கு சக்கர டிரைவ் பிக்-அப் லோரியை நசுக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், மதியம் 2.14 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கோல குபு பாரு நிலையத்திலிருந்து ஐந்து பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார்.
ஒரு மரம் விழுந்து பிக்-அப் லோதி நசுங்கியதால், டிரைவர் உள்ளே சிக்கிக்கொண்டதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.








