வரவுசெலவு திட்டம் 2026: டாக்ஸி மற்றும் இ-ஹெய்லிங் கார் உரிமையாளர்களுக்கு வரி விலக்கு

கோலாலம்பூர்:

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார் (இ-ஹெய்லிங்) உரிமையாளர்களுக்கு அரசு முக்கிய நிதிச் சலுகையை அறிவித்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

புதிதாக புரோட்டோன் (Proton) அல்லது பெரோடுவா (Perodua) தேசிய கார்கள் வாங்கும் ஓட்டுநர்களுக்கு, 100% Excise Duty மற்றும் விற்பனை வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.

இந்த வரி விலக்கு, டாக்ஸி மற்றும் இ-ஹெய்லிங் துறையில் பணிபுரியும் தொழில்முனைவோரின் நிதிச் சுமையைக் குறைப்பதோடு, நாட்டின் போக்குவரத்து சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here