கோத்தா கினபாலு:
ஐக்கிய முற்போக்கு கினபாலு அமைப்பு (UPKO), பக்காத்தான் ஹராப்பானில் (PH) இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்னதாக நடைபெற்ற சிறப்பு உச்ச மன்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று UPKO பொதுச் செயலாளர் டத்தோ நெல்சன் டபிள்யூ. அங்காங் கூறினார், இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் டத்தோ எவோன் பெனடிக் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு முழு ஆதரவையும் தெரிவித்தது என்று அவர் சொன்னார்.
சபாவின் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டக்கூடிய கூட்டணிகளுடன் மட்டுமே Upko அரசியல் ஒத்துழைப்பை கொண்டு இருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.




















