ஆயர் ஹித்தாம் அணையின் நீர் மட்டம் மேலும் குறையும் என எதிர்பார்ப்பு

ஜார்ஜ்டவுன்:

நோன்புப்பெருநாள், யுகாதி மற்றும் சித்திரைப் புத்தாண்டு என வரிசையாக பண்டிகைகள் கொண்டாடப்பட்டுவருகின்ற நிலையில், ஆயர் ஹித்தாம் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர் கொள்ளளவு 31.2% ஆக இருந்தது, இது 31 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும், எனவே தண்ணீரைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு பினாங்கு நீர் வழங்கல் நிறுவனம் (PBAPP) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆயர் ஹித்தாம்  அணை மூலமாக சுமார் 30,000 நுகர்வோர் பயனடைகின்றனர், எனவே அணையின் நீர்மட்டம் பற்றி அனைவரும் அறிந்திருப்பதால், குறிப்பாக இந்த விழாக்களில் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்று, பினாங்கு துணை முதலமைச்சர் II ஜக்தீப் சிங் தியோ கூறினார்.

மேலும் வெப்பம் மற்றும் வறண்ட பருவகாலம் இன்னும் முடிவடையாததால், பொதுமக்கள் நீர் வழங்கல் நிறுவனத்தின் வேண்டுகோளை செவிசாய்த்து தண்ணீரை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here