சென்னை,தவெக தலைவர் விஜய், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்ததாக கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார். கடந்த சில காலங்களாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின.
இருப்பினும், அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான் விவாகரத்து வழக்கு தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளன. திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.









