சீன கல்லறையில் தகாத உறவில் ஈடுபட்ட இருவர் கைது

ஜார்ஜ் டவுன்: பினாங்கு, ஆயர் ஈத்தாமில் உள்ள ஒரு சீனக் கல்லறையில் தகாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வைரல் வீடியோவில் காணப்பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் போலீசாரால் கைது செய்துள்ளனர். மார்ச் 22 அன்று பத்து கந்தோங் சீனக் கல்லறையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து நேற்று புகார் பதிவு செய்யப்பட்டதாக திமூர் லாட் காவல் நிலையத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.

ஆயர் ஈத்தாமில் உள்ள ரைபிள் ரேஞ்ச் அருகே ஒரு குடியிருப்பில் 37 வயதுப் பெண் ஒருவரும், சுங்கை ஆராவில் 58 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ரோசாக் கூறினார். சந்தேக நபர்கள் இருவரும் இந்த வழக்கில் தங்களது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகாத செயல்களில் ஈடுபடுதல், ஒருவரின் மானத்திற்கு பங்கம் விளைவித்தல் மற்றும் இணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மயானத்தில் உள்ள கல்லறை அருகே ஆபாசமான செயலில் ஈடுபட்ட பிறகு, அந்த ஆண் நிர்வாணமாகக் காணப்பட்ட நிலையில், அந்த ஜோடி விசாரிக்கப்பட்டதை ஒரு வைரல் வீடியோ காட்டியது. அவர்கள் இருவருக்கும் கணவன் – மனைவி இல்லை  என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் அஜிசி இஸ்மாயில் கூறியதாக என்.எஸ்.டி செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here