வளர்ச்சி கண்ட மாநிலமாக ஜோகூரை உருவாக்க இலக்கு

உயர் சம்பளத்துடன் இளைஞர்களுக்கு உத்வேகத் திட்டங்கள்
பாரிசான் நேஷனலின் 6 அம்சத் திட்டங்கள்

(கோகி கருணாநிதி)

லேசியாவிலேயே பெரும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக ஜோகூர் மாநிலத்தை உருவாக்கும் இலக்கை வகுத்து பாரிசான் நேஷனல் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

2026 மாநில 16ஆவது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 6 முக்கிய அம்சங்களை முன்வைத்து அக்கூட்டணி மக்களை அணுகி வருகிறது.

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று இனரீதியாக ஒவ்வோர் இனத்தையும் அடையாளம் காட்டுவதை விடுத்து பங்சா ஜோகூர் எனும் ஒரு பொது அடையாளத்துடன் ஜோகூர் மாநில பாரிசான் நேஷனல் அரசாங்கம் தனித்துவமான ஒவ்வொரு திட்டத்தையும் அமல்படுத்தி வருகிறது.

2030 வளர்ச்சி அடைந்த ஜோகூர் எனும் கோட்பாட்டுடன் பாரிசான் நேஷனல் இத்தேர்தலை அணுகி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஜோகூர் மாநிலத்தை அதீத வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தை இலக்காகக் கொண்டிருக்கிறது.

வெளிப்படையான அரசாங்க நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, அடிப்படை அத்தியாவசிய கட்டமைப்புகள், தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஜோகூர் இளம் தலைமுறை ஆகிய அந்த 6 அம்சங்கள் தன்னுடைய இலக்கின் தூண்களாக பாரிசான் நேஷனல் கட்டியெழுப்பி இருக்கிறது.

2025ஆம் ஆண்டில் ஜோகூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.0 விழுக்காடாகப் பதிவாகி தேசிய சராசரியான 5.2 விழுக்காட்டை விட உயர்ந்த இடத்தில் இருந்தது. தொடர்ந்து 2ஆவது ஆண்டாக மலேசியாவிலேயே மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை ஜோகூர் பதிவு செய்தது.

2025ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்டு நாட்டிலேயே முதலீட்டில் முதலாவது இடத்தை பெற்றது. அதே சமயம் 24,600 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் சந்தையில் 345,700 பேர் என அதிகரித்துள்ளனர். வேலை வாய்ப்பின்மை விகிதம் 3.2 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

பந்துவான் காசே ஜோகூர் (BKJ )

ஜோகூர் மாநில ஒட்டுமொத்த வருவாயின் ஒரு பகுதி பந்துவான் காசே ஜோகூர் திட்டத்தின் வழி மக்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. இதற்காக 2025ஆம் ஆண்டில் 209 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு 42 திட்டங்கள் வழி 1.7 லட்சம் மக்கள் பயன்பெற்றனர். வாழ்க்கைச்செலவுகள், சுமைகளைக் குறைக்கும் நோக்கில் பி40 பிரிவினர் மூத்த பிரஜைகள், மாற்றுத்திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

ஜோகூர் மந்திரிபெசாரின் அதிரடியான கள ஆய்வுகள்

மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள பிரச்சினைகளிலும் நேரடியாக களம் இறங்கி தலையிட்டு தீர்வுகாணும் அணுகுமுறையை மந்திரிபெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தீவிரமாகக் கடைப்பிடித்தார்.


ஜோகூர் பாலம், 2ஆவது இணைப்புப் பாலம் ஆகியவற்றில் குடிநுழைவு நெரிசலைக் குறைக்க அதிகாலை 4 மணிக்கெல்லாம் அங்கு பலமுறை களம் இறங்கி திடீர் ஆய்வுகளை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டார்.

தினமும் சிங்கப்பூர் சென்று திரும்பும் 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் சிரமங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டன. மருத்துவமனைகள், பள்ளிகள், பெடரல் சாலைகள் பராமரிப்புப் பணிகளும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இவை யாவும் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸியின் நேரடி களப்பணிகள் மேலும் ஆய்வுகள் வழி முன்னெடுக்கப்பட்டன.

இந்திய சமூகத்திற்கான பங்களிப்புகள்

பெர்லிங் தொகுதியில் தாமான் புக்கிட் இண்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், புக்கிட் செரம்பாங் தேசியத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கான நிலம், கட்டட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன.

லாடாங் மாடோஸ், லாடாங் செம்புரோங், தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளின் நீண்டகால நிலப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு 6 ஏக்கர் புதிய நிலம் ஒதுக்கப்பட்டது.

ஜோகூர் மாநிலம் முழுவதும் 17 இந்து ஆலயங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பாசிர் கூடாங் தெலுக் ஜாவா இந்து ஈமக்கிரியை மையத்தின் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டு ம@லசியாவிலேயே ஒரு நவீன ஈமக்கிரியை மையம் நிர்மாணிக்கப்படுவதற்கு அரசாங்கம் வகை செய்தது.

உலு சோ, குளுவாங்கில் 5 மில்லியன் ரிங்கிட்செலவில் தகன மையங்கள் அமைக்கும் நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ப்பள்ளிகள், இந்திய அரசுசாரா அமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுல்தான் ரொஹாயா அறக்கட்டளை வழி கல்வி, சமூக நலன், தொழில்முனைவோர், சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஜோகூர் பொருளாதார மாற்றுத்திட்டம் (JEPT)

2026 ஜூன் 18ஆம் தேதி ஜோகூர் பொருளாதார மாற்றுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வளர்ச்சி அடைந்த மாஜு ஜோகூர் 20230 இலக்கை அடைவதற்கான மாநில அரசாங்கத்தின் ஓர் எழுச்சிமிகு திட்டமாகும். இதில் ஜோகூர் மாநிலத்தின் அனைத்து 10 மாவட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

2030ஆம் ஆண்டுக்குள் மாநில நிகர உள்நாட்டு உற்பத்தியை 260 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்துவதும் இத்திட்டத்தின் இலக்காகும். அதே சமயம் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அவற்றுள் ஒரு லட்சம் உயர் சம்பள வேலை வாய்ப்புகளும் இடம்பெறுவதும் இதில் அடங்கும்.

மாநிலத்தின் 70,000 ஜோகூர் மலிவு விலை வீடுகளை (RMMJ) நிர்மாணிக்கும் திட்டமும் இந்த ஜோகூர் பொருளாதார மாற்றுத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதேசமயம் சமூக முன்@னற்றம், வறுமை ஒழிப்பிற்காக 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

2026 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிக்கை & மாஜு ஜோகூர்
நிலைத்தன்மை தொடரட்டும்; முன்னேற்றம் நீடிக்கட்டும்

முக்கிய வாக்குறுதிகள்:
திறமையான, செயல்திறன் மிக்க நல்லாட்சி, பொருளாதார வளர்ச்சியை @மலும் வலுப்படுத்துதல்
2030ஆம் ஆண்டுக்குள் நிகர உள்நாட்டு உற்பத்தியை
260 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்துவது இலக்கு
தலைக்கு 69,000 ரிங்கிட் வருமான இலக்கு
2 லட்சம் உயர்திறன், உயர் வருமான வேலை வாய்ப்புகள்
சமூகப் பாதுகாப்பை வலையமைப்பை உறுதிப்படுத்துதல்
அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
பாதுகாப்பு, தூய்மை, சுற்றுச் சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்தல்
ஜோகூர் மாநில இளைஞர்களை மையமாகக் கொண்ட
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here