வெள்ளிக்கிழமை (மே 8) கோம்பாக்கில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, ஓடும் வாகனத்தின் மீது மரம் ஒன்று விழுந்தது. இந்தச் சம்பவம் பத்து 10 பகுதிக்குள் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் கூறினார். மரம் விழுந்து ஒரு காரை நசுக்கியதால், போக்குவரத்து தடைபட்டது.
இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, பாதிக்கப்பட்டவர் தனது வாகனத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். அதற்குப் பிறகு மரம் அகற்றப்பட்டுவிட்டது. மேலும் அப்பகுதியில் வேறு எந்த ஆபத்துகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.









