வீடியோ பாடலில் பால் டப்பாவுடன் இணைந்து நடனமாடிய நடிகை திரிஷா …

விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்த திரிஷா சிம்புவுடன் இணைந்து விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்து மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார். விஜய் சேதுபதியுடன் 96 படமும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. மணிரத்னம் இயக்கத்தில் குந்தவையாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷா, கோட் படத்தில் மட்ட பாடலுக்கு மஞ்சள் சேலை அணிந்து வந்து நடனமாடினார்.

தவெக தலைவர் விஜய்யுடன் திரிஷாவை இணைத்து வைத்து பல பேச்சுக்கள் உலா வருகின்றன. பிறந்தநாள் அன்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு விஜய் வீட்டுக்குச் சென்ற திரிஷா அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு கிளம்பினார். ‘கருப்பு’ படத்துக்குப் பிறகு புதிதாக எந்தவொரு படத்திலும் திரிஷா கமிட் ஆகவில்லை என்றும் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் வதந்திகள் கிளம்பின.

இந்நிலையில், நடிகை திரிஷா பால் டப்பாவுடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார். ஊஞ்சலில் பால் டப்பாவுடன் திரிஷா ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. Psilovibin என்கிற வீடியோ பாடலில் திரிஷா மற்றும் பால் டப்பா இணைந்து நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ பாடல் தற்போது தீயாக பரவி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here