மீண்டும் இரட்டைச் சாதனை; தீவிரப் பயிற்சியில் டாக்டர் ஜெய்பிரபாகரன்.

பி. ராமமூர்த்தி

மெந்தகாப், நவ. 1-

பகாங் லிப்பிஸ் மண்ணின் மைந்தரான 26 வயது உடற்பயிற்சி பயிற்றுநர் டாக்டர் ஜெய்பிரபாகரன் 2023 ஆகஸ்டு மாதம் 12 மணி நேரம் இடைவிடாது கார்டியோ எடை தூக்கும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு  செய்து உலகச் சாதனை, மலேசிய சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்து சாதனை படைத்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கும் ஜெய் டிரேட்மில்ஸ், டம்பெல்ஸ், பார்பெல்ஸ் ஆகிய துறைகளில் 20க்கும் மேற்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி எடை தூக்குவதில் சாதனை படைத்தார்.

இப்போது அதன்  தொடர் முயற்சியாக 2024ஆம் ஆண்டில் புதிய உலக மேலும் ஆசிய சாதனையைப் படைப்பதற்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி டிங்ம்பர் மாதம் வரையிலும் அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என மொத்தம் 5 மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

வாரத்தில் 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 முறை இப்பயிற்சியை அவர் மேற்கொள்வார். இந்தப் புதிய முயற்சி முன்பைவிட மிகச் சவாலானதாக இருக்கும். அதனை எதிர்கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். தமக்குப் பக்கபலமாக இருந்து ஆசியும் ஆதரவும் வழங்கி வரும் தாயார் எஸ் சுகுணமலர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஜெய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here