கோல காங்சாரில் உள்ள செபெராங் மனோங் படகுத்துறைக்கு அருகில், பேராக் ஆற்றில் 45 வயதுடைய ஆணின் சடலம் நேற்று மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பொதுமக்களால் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. ஆற்றங்கரையோரம் ஒரு படகின் அருகே, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இருந்து சடலத்தை மீட்டனர்.









