வருகின்ற ஜோகூர் மாநிலத் தேர்தல்யொட்டி, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நேரம் இது என்று மாநில செயலாளர் அழகேந்திரன் கிருஷ்ணன் கூறினார். மக்களின் நலன், பொருளாதார முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் முடிவை தைரியமாக, குடும்பத்தைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய காலம் இது.
பல ஆண்டுகளாக மக்கள் எதிர்கொண்டு வரும் வாழ்க்கைச் செலவின உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு சவால்கள், சிறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சி குறைபாடு, கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் ஆகிய இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
எனவே, இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் அரசியல் கோஷங்களை விட கொள்கைகள், செயல்திறன், எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு, பெரிக்காத்தான் நேஷனல், ஜோகூரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், புதிய முதலீடுகள், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகிய அனைத்து மக்களுக்கும் சமமான வாழ்க்கை முன்னேற்றத்தை வழங்குதல் ஆகியவற்றை தனது முக்கிய இலக்குகளாகக் கொண்டு பெரிக்காத்தான் நேஷனல் செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில், ஜோகூரில் வாழும் இந்திய சமூகத்தினர் உட்பட அனைத்து சமூகங்களும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கல்வி முன்னேற்றம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், சிறு, நடுத்தர தொழில்களுக்கு நிதி ஆதரவு, வீட்டுவசதி வாய்ப்புகள், சமூகப் பொருளாதார முன்னேற்றம் போன்ற துறைகளில் கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என அழகேந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது சொன்னார்.
பல குடும்பங்கள் இன்னும் வாழ்க்கைச் செலவின உயர்வு, பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. எனவே, மாநிலத்தின் அனைத்து சமூகங்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, யாரும் பின்தங்காத வகையில் சமநிலையான வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஜோகூரின் பன்முக சமூக அமைப்பே மாநிலத்தின் பலமாகும். மலாய், சீனர், இந்தியர் ஆகிய சமூகங்கள் அனைவரும் சமமான வாய்ப்புகளையும் முன்னேற்றப் பாதைகளையும் பெறுவதை உறுதி செய்வதே இந்த அரசாங்கத்திற்கும் முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும். ஜோகூரின் எதிர்காலம் எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்தின் எதிர்காலம் அல்ல, இது அனைத்து மக்களின் பொதுவான எதிர்காலமாகும். வரவிருக்கும் தேர்தல், ஜோகூரை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லக்கூடிய தலைமையையும், கொள்கைகளையும் தேர்ந்தெடுக்கும் இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.
எனவே, ஜோகூர் மக்கள் அனைவரும் ஜனநாயகப் பொறுப்பை உணர்ந்து, மாநில வளர்ச்சியின் வழுவான எதிர்காலத்திற்காக சிந்தித்து வாக்களிக்வேண்டும் என மேலும் அழகேந்திரன் தெரிவித்தார்.
(சண்முகம் செல்வம்)





















