ஓடிடி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. “அவதார்: பயர் அண்ட் ஆஷ்” ஸ்ட்ரீமிங் தேதி வெளியானது

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் 2009-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் பல சாதனைகளைப் படைத்த அந்த திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. இதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படமும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஓடிடியில் வெளியாகும் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’

அதனைத் தொடர்ந்து வெளியான அவதார்: பயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் உலகளவில் ரூ.8,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 24-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here