கோலாலம்பூரிலுள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே நடந்த சண்டையின் காணொளி தொடர்பில் போலீஸ் விசாரணை ஆரம்பம்

கோலாலம்பூரிலுள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே நடந்த சண்டையின் சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 3) நடந்த சண்டை தொடர்பான ஒரு வீடியோவை போலீசார் கண்டுபிடித்ததாக வங்சா மாஜு மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் டி சாரலதன் கூறினார்.

“1 நிமிடம், 36 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, டுவிட்டரில் @nanmanjoi8715 என்ற பயனரால் பதிவேற்றப்பட்டது.

“எவ்வாறாயினும், சம்பவம் குறித்து காவல்துறையினர் இதுவரை எந்தப் புகாரையும் பெறவில்லை ” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை, உளவுத் தகவல்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வீடியோக்கள் மற்றும் ஊகங்கள் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here