கார் மோதி ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மரணம்.

கோலாலம்பூர்:

நேற்று மாலை ஜாலான் பாஹ்லாவானில் தனது கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், 68 வயதான ஓய்வு பெற்ற அரசு பல்கலைக்கழக விரிவுரையாளர் மாக் கெம் செங் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜாலான் லஜெண்டா உத்தாமாவிலிருந்து ஜாலான் பட்லிஷா நோக்கி புரோட்டான் வீரா காரை அவர் ஓட்டிச் சென்றபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கமாகச் சரிந்து கோலா மூடா நல வாரிய வளாகத்தின் நுழைவாயில் சுவரில் மோதியதாகக் கோலா மூடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வேளையில், இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here